:: குறையெலாம் தீர்ந்திட குழுமணிக்கு வாருங்கள் ::

1) தாயேப் பிரத்யங்கிரா
சரணடைந்தேன் உன்பாதம்
நீயே கதியென்று
நின்னிடம் ஓடிவந்தேன்?
முன்னே பிழைத்தேனோ
முற்பிறப்பின் கொடும் பயனோ?
ஒன்றுமே நானறியேன்
உத்தமியே காத்தருள்வாய்!

2) காத்தருள்வாய் நீயென்று
நானும் உனைப்பணிந்தேன்.
காத்திருக்க வைக்காமல்
கண்மணியே காத்திடுவாய்
ஓடி வந்தே எண் குறைகள்
ஒழித்தே அழித்திடுவாய்.
நாடி வந்த எந்தனுக்கு
நல்லருளைத் தான் சுரப்பாய்!

3 ) சுருக்கின்ற எண் குறையை
சுருக்காமல் வையென்று
இரந்து உனைநாடி
நான் வேண்டப் போவதில்லை
உள்ள குறையெல்லாம்
உன் விழிகள் தானறியும்
அவற்றை அழிப்பதேல்லாம்
அன்னை நின் திருவடியே!

4 ) திருவடியை நம்பி
பேறுபெற்றோர் பலருண்டு,
நம்பினோர் எல்லோரும்
நல்வாழ்வு பெற்றிட்டார்,
குழுமணியில் கோலோச்சி
குலம் செழிக்க அருள் வழங்கும்
கோமாதாப் பிரத்யங்கிரா
கோரினேன் உன் பார்வை!

5 ) உன்பார்வை அருளாலே,
உயர்வாழ்வு தான் மலரும்
எண்ணியநல் லெண்ணங்கள்
இனிதாக நிறைவேறும்
துள்ளிவரும் பகையாவும்
தூள் தூளாய்ப் மறைந்து விடும்
கொள்ளிக்கு நிகரான
கொடுநோய்கள் பறந்துவிடும்.
6 ) பறந்துவிடும் வறுமை,
பணக்கஷ்டம், பரிதவிப்பு
சுரந்து வரும் சுகத்தோடும்
மறந்தேனும் ஒரே ஒருக்கால்
பிரத்யங்கிரா உன் நாமம்
மனதினிலே மகிழ்வோடு
மாசின்றி உரைத்தாலே!
7 ) உரைத்தேன் உன்பெயரை;
உணர்ந்திட்டேன் உன்னருளை,
மறைநான்கும் தந்திட்ட
மாதெய்வம் நீ அம்மா!
நயேன்செய் பிழையாவும்
நற்றாயே நீ பொறுத்து
சேயாம் எனை நீயும்
சிறப்பாகக் காத்திடும்மா!

8 ) காத்திடம்மா என்றே
காலமெலாம் வேண்டிடுவோர்
பாழ்துக்கம் நீக்கிப்
பரசுகத்தைத் தந்திடுவாய்
கோரிய வரம்தன்னைக்
குறையாமல் தந்திடுவாய்
நேரிய வழி நிற்போருக்கு
நேயமிகுப் பிரத்யங்கிரா.
9) பிரத்யங்கிரா, பிரத்யங்கிரா
என்றே நான் முழுங்குகின்றேன்.
முன்னின்று காத்திடவே,
முக்காலும் வேண்டுகின்றேன்,
பாகாய்த் தாணுருகிப்
பரிதவிக்க வைக்காமல்,
பரிகரிப்பாய் என்துயரம்
பல்வேறு குறைகளையும்!

10) குறைசொல்லாமல் எனது குணம்
குறைபொறுத்தல் நினது புகழ்
நிறைவாழ்வு தந்திடவே
நித்தியமும் வேண்டுகிறேன்
ஞானஅருள் சுரக்கின்ற
நல்லறிவேப் பிரத்தியங்கிரா
நானுந்தான் அடைக்கலமே
நம்பினேன் உன்பதம் !
11 ) உன்பதம் போற்றி
உன் கருணை விழிபோற்றி
உனதருளை நான்வேண்டி
நெஞ்சாரப் படுகிறேன் !
நிம்மதியைத் தான்தந்து
நீடுபுகழ் வாழ்வளிப்பாய்
குழுமணித் திருத்தலத்தில்
கோலோச்சும் பிரத்தியங்கிரா!

12 ) பிரத்தியங்கிரா தேவியவள்
பொற்பதாம் தான்பணிந்து
திருமுன்னே நின்று
திடமாகப் பிரார்த்தித்தால்
வந்த வினையும் வரபோகும் வல்வினையும்
நொந்தே அழிந்துவிடும் !
சுகந்தமிகு சந்தணம்போல்
சுகத்தோடு வாழவைப்பாள் !